சாவகச்சேரி பகுதிக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை

Jaffna Floods In Sri Lanka
By Sumithiran Dec 02, 2024 06:25 AM GMT
Sumithiran

Sumithiran

in இயற்கை
Report

புதிய இணைப்பு

வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சாவகச்சேரி - கச்சாய் உப்புகேணி கிராமத்திற்கு அரசாங்க அதிபர் நேரடியாக கள ஆய்வு செய்துள்ளார்.

இதன்போது வெள்ளமானது இயற்கையாக ஓடுவதற்கான வழிவகைகள் தடைப்பட்டுள்ளதனால் அதனை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினை ஆராய்ந்து வெள்ள நீரை தற்காலிகமாக தண்ணீர் பம்புகள் ஊடாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் விரைவில் கூட்டத்தினை நடாத்தி நிரந்தர தீர்வு காணலாம் என அப்பகுதி பொதுமக்களிடம் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

முதலாம் இணைப்பு

கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண(jaffna) மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.

சாவகச்சேரி பகுதிக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை | Heavy Rain In Jaffna

குறிப்பாக நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 24 மணி நேரத்திலே 253 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

இது ஒரு பாரிய அளவாக காணப்படுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (01) தெரிவித்துள்ளார்.

73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தினால் பாதிப்பு

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 693 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

29ஆம் திகதி நவம்பர் மாதம் வரை 82 பாதுகாப்பு நிலையங்களில் 2,163 குடும்பங்களைச் சேர்ந்த 7417 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். டிசம்பர் முதலாம் திகதி 26 பாதுகாப்பு நிலையங்களில் 692 குடும்பங்களை சேர்ந்த 2393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

சாவகச்சேரி பகுதிக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை | Heavy Rain In Jaffna

மழை வீழ்ச்சியினுடைய தன்மை அல்லது அளவு குறைவடைந்து காணப்படுகின்றமையால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்த போதிலும் பல இடங்களில் வெள்ள நீரோட்டம் இயல்பான நிலையில் காணப்படாத நிலையில் வெள்ளம் காணப்படுகின்றது.

இவ்வாறான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய சமைத்த உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல் : மக்கள் பெரும் திண்டாட்டம்

தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல் : மக்கள் பெரும் திண்டாட்டம்

சில பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் மூலம் சமைத்த உணவு வழங்கப்படாமையை அவதானிக்க முடிந்தது. உடனடியாகவே அந்த மக்களுக்கு தேவையான காலப்பகுதிகளுக்கு சமைத்த உணவை அரச நிதியின் மூலம் வழங்குவதற்கு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

உப்புக்கேணி கிராமத்தில் தொடர்ந்தும் வெள்ளம்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உப்புக்கேணி என்ற பகுதியில் நீர் வழிந்து ஓட முடியாமல் 50 குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். வெள்ளநீர் உடனடியாக வழிந்தோடக்கூடிய சாத்தியப்பாடு இல்லாத காரணத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் அந்த நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

அதேபோல பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் எங்களுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையிலே இந்த வெள்ளம் வழிந்து ஓட முடியாத நிலை தொடர்ந்து காணப்படுமாயின் அதற்குரிய பொருத்தமான பொறிமுறை மூலம் அந்த வெள்ளம் அகற்றப்பட இருக்கின்றது.

தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வெள்ள நிலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் நாங்கள் முற்கூட்டியே வடிகால் அமைப்பு முறைகளை சரியான விதத்தில் பேணிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்காக அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்த்து நிறகின்றோம்.

சீரற்ற காலநிலையினால் மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்

சீரற்ற காலநிலையினால் மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்

எதிர்வரும் காலத்தில் நாங்கள் பிரதேச செயலர் ரீதியாக, எந்தெந்த பிரதேசங்களில் வெள்ளம் வழிந்து ஓட பொருத்தமான முறை இல்லை என்ற தரவுகளைப் பெற்று, அதற்கு தீர்வை காண்பதற்கு அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து, நேரடியாக அந்த பகுதிக்கு சென்று என்னென்ன விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான விடையங்களை பெற்று, அதற்குரிய நிதி ஒதுக்கீட்டினை அமைச்சின் மூலம் பெற்று அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

ஆகவே அனைத்து திணைக்களங்களிடமும் அதற்கான உதவி எங்களால் கோரப்பட இருக்கின்றது என்றார்.  

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025