வடக்கு - கிழக்கில் புயலுக்கான வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வடக்கு - கிழக்கில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறி புயலுக்கு முந்திய நிலையில் உள்ளதாகவும் அடுத்த கட்டமாக அது ஒரு புயலாக மாறும் எனவும் யாழ் (Jaffna) பல்கலைக்கழகத்தின் புவியியல் துரையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீப ராஜா (Nagamuthu Pradeepa Raja) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாகாணங்களும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும்.
இவற்றுடன், வடமத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிககிகளிலும் கன மழை மற்றும் மிக வேகமான காற்றுக்கும் வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புயலின் தாக்கம், மக்கள் எதிர்கொள்ளக்கூடிய இன்னல், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் எந்த மாகாணங்கள் மீது அதிகளவு தாக்கம் ஏற்படும் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
[MKBAAHF ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |