மீண்டும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்
டிட்வா புயலால் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் தற்போது தொடரும் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.
இவ்வாறு திருகோணமலை தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்களே நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக இவ்வாறு நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
பாரிய நட்டம்
ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

திட்வா புயல் காரணமாக வெள்ள நீரின் அளவு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்ற நிலையில்.
இயல்பு நிலை திரும்பி மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் தம்பலகாமம் சம்மாந்துரைவெளி,பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவனம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெய்து வரும் தொடர் மழையால் வயல் நிலங்கள் அழிந்துள்ளன.

டித்வா புயலில் மக்களிற் வயல் நிலங்கள் மற்றும் கால் நடைகள் அழிவைச் சந்தித்திருந்த வேளை புயலுக்கு பின்னரான காலநிலையிலும் அது தொடர்கின்றது
இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கில் அதிகளவான மழை பெய்துவருவதால் விவசாயிகளின் வயல் நிலங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன
வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் பெய்துவரும் தொடர் மழையால் வயல்களை மூடி நீர் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


செய்தி - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |