ஓமானில் கடும் வெள்ளப்பெருக்கு:பலர் உயிரிழப்பு
Weather
World
By Laksi
ஓமானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலையால் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அத்துடன் கடும் மழை காரணமாக வாகனங்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கும் நடவடிக்கை
இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் அனைத்து பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், அடுத்த சில தினங்களில் வடகிழக்கு மற்றும் வடக்கு ஓமான் முழுவதும் மிதமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்