திருகோணமலையில் உள்ள எரிபொருள் வளாகம் முழுவதையும் இந்தியாவிற்கு விற்பனை செய்யத் திட்டம்! வெளிவந்த தகவல்
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் உள்ள 75 எரிபொருள் சேமிப்பு தாங்கிகள் உட்பட முழு வளாகத்தையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி(Hector Appuhamy) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு இரண்டையும் பிறப்பித்து, இந்த அரசாங்கம் எப்போது இலங்கையை யாருக்கும் விற்கும் என்று எங்களுக்குத் தெரியாது.
நள்ளிரவு 12 மணிக்கு அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் உட்பட்ட குழு திருகோணமலைக்கு செல்வதை நாங்கள் பார்த்தோம். இது ஒரு முழுமையான திருட்டு.
திருகோணமலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துவிட்டே இவ்வாறு சென்றுள்ளனர்.
75 எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட முழு துறைமுகம் அல்லது பகுதியையும் விற்கப்போகிறார்கள் என்றார்.