கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் - பதறவைக்கும் காணொளி
இராணுவ வானூர்தி ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
கொலம்பிய இராணுவ வானூர்தி தொடர்புடைய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வானூர்தியானது கொலம்பிய இராணுவத்திற்கு சொந்தமானது எனவும், கட்டுப்பாட்டை இழந்து, திகிலை ஏற்படுத்தும் வகையில் சுழன்று பின்னர் தரையில் விழுந்துள்ளது.
கொலம்பிய அதிபர்
இந்த நிலையில், கொலம்பிய அதிபர் Gustavo Petro தமது டுவிட்டர் பக்கத்தில் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், அதில் பயணித்த நான்கு இராணுவ அதிகாரிகளுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் தரப்பு உடனடியாக செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Shocking visuals of a helicopter that crashed in urban area of Quibdó in Colombia , the helicopter belongs to the Colombian Army. Further details awaited. pic.twitter.com/9oeQf7GRsN
— FL360aero (@fl360aero) March 19, 2023
வானூர்தி விபத்தில் சிக்கி பலியானவர்களில் ஒருவர் லெப்டினன்ட் ஜூலியத் கார்சியா எனவும், UN-1N ஹெலிகொப்டரில் விமானி பயிற்சியை முடித்த முதல் பெண் இராணுவ அதிகாரி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வானூர்தி விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.