எவரெஸ்ட் சிகர அடிவாரத்தில் இரு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து: இந்தியர் உயிரிழப்பு
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இரு ஹெலிகொப்டர்கள் மோதி இன்று (03) விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர் இந்திய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் இன்று காலை 8 மணியளவில் தரையிறங்க முயன்ற ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
மீட்பு பணிகள் தீவிரம்
இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிநாட்டுப் பயணி உயிரிழந்தார். இரு ஹெலிகொப்டர்களின் கெப்டன்களான கே.சி. பிரஜ்வல், ரவீந்திர பிரஜாபதி, நியூசிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஒருவர் என மூவர் காயமடைந்துள்ளார்.

உயிரிழந்த இந்திய பயணியின் உடல் லுக்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள சிம்ரிக் ஏர் ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |