தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு

Sri Lankan Tamils India
By Rusath Nov 02, 2026 11:36 PM GMT
Report

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் மத உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இவ்விடயங்கள் தொடர்பில் இந்திய நிதியமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

இந்து ஆலயங்களுக்கு நெருக்கடி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ''இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் உள்ளன.

தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு | Rights Issues Facing The Tamil People

குறிப்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்புகள், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக இந்து ஆலயங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிக்கொண்டு புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டம் தொடர்பான கரிசனைகள் குறித்து இந்திய நிதியமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

குறிப்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடுகளால் ஆலயங்களின் ஆன்மீகச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் எடுத்துரைத்தோம்.

திருகோணமலையில் உள்ள சிவன் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், இந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினோம்.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பிலும் எமது கரிசனைகளை வெளிப்படுத்தினோம்.

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவுடனான இராணுவ மோதலுக்கு தயார்! பேச்சுவாரத்தையில் ஈரான் பகிரங்க எச்சரிக்கை

3ஆவது அரசியலமைப்புத் திருதம்  

அதேபோன்று, இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு | Rights Issues Facing The Tamil People

இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைத் தேர்தல்களைக்கூட நடத்துவது தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகின்றது.

இவ்விடயங்கள் தொடர்பிலும் விரிவாக எடுத்துரைத்தோம். நாம் முன்வைத்த அனைத்து விடயங்களையும் இந்திய நிதியமைச்சர் மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், இப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும், ஆலயங்கள் தொடர்பான விடயங்களிலும் உரிய கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன், இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை நாம் கோரியுள்ளோம். அதேவேளை, இந்தியாவின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினோம்.

ஏற்கனவே முன்மொழியப்பட்டு, அனுமதிகள் கிடைக்காத காரணத்தினால் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்தியத் தரப்பின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம்" என சிறிநாத் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019