முல்லை. மாவட்ட கொரோனோ தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்திற்க கிடைத்த உதவி!
Corona
Mullaithivu
SriLanka
Dr.M Umashankar
By Chanakyan
முல்லைத்தீவு மாவட்ட செயலர் திரு.K.விமலநாதன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.M.உமாசங்கர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக கடந்த 28ஆம் திகதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ORHAN நிறுவன செயலாளர் திரு. சு.ஜெயச்சந்திரன் அவர்களால் ரூபா 1,75,200 பெறுமதியான சலவை இயந்திரம், நுளம்புவலை, தலையணை, தலையணை உறை, முகக்கவசங்கள், படுக்கை விரிப்புகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சுவிட்சர்லாந்து Vijai Foundation நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன், செயலக பணியாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணியாளர்கள் மற்றும் ORHAN நிறுவன நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் இ.திவாகர், நிர்வாக உத்தியோகத்தர் ப.அமுதாவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்