சஜித்தின் எம்பிக்களும் மகிந்தவை பார்க்க படையெடுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே (Hesha Withanage )iமற்றும் திலீப் வெத ஆராச்சி Dilip Wedaarachch) ஆகியோர் தங்காலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச்(mahinda rajapaksa) சந்தித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலீப் வெத ஆராச்சி ஆகியோர் அவரைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹேஷா விதானகே முன்னர் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெத ஆராச்சி நாடாளுமன்றத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் பணியாற்றினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
