இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் புதிய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் (Hamas)அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
சமீபத்தில், ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
புதிய தலைவர்
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்டார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக நைம் காசிம் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது “எங்கள் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் (Hassan Nasrallah) பணித் திட்டத்தின் தொடர்ச்சியே எனது வேலையும்.
சமாதான பேச்சுவார்த்தை
அவர் உருவாக்கிய போர்த் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்.இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளின்படி நடந்தால் மட்டும் தான். போர் நிறுத்தத்திற்காக நாங்கள் கெஞ்ச மாட்டோம்" என நைல் காசிம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தர்கள், லெபனான் மற்றும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.
போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் ஹிஸ்புல்லா புதிய தலைவர் நைம் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |