அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி: உற்று நோக்கும் ஈரான்
அரபு நாடுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் (Hamas) உடன் தொடங்கிய போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது. மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த போர் மாதக்கணக்கில் நீடித்த நிலையில், இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஈரான் (Iran) ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
மத்திய கிழக்கில் அமைதி
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் பேசிய நெதன்யாகு மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் அரபு நாடுகளுடன் இணைந்து சமாதானமாகப் போக விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இங்குள்ள அரபு நாடுகளுடன் சமாதானம் அடைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருந்தேன்.
அரபு நாடுகளுடன் சமாதானம்
அந்த செயல்முறையை மீண்டும் தொடர விரும்புகிறேன்" மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
ஈரான் என்ற தீய நாட்டில் இருந்து மற்ற நாடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எங்கள் உறுதி மற்றும் தைரியத்தால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
எங்களைப் போலவே, அவர்களும் ஒரு நிலையான, பாதுகாப்பான, வளமான மத்திய கிழக்கை விரும்புகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |