ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைக்கு பேரிடி: துணைத் தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்!
ஹிஸ்புல்லா அமைப்பின் உயரடுக்கு ரத்வான் படைகளின் துணைத் தளபதி முஸ்தபா அஹ்மத் ஷஹாதி (Mustafa Ahmad Shahadi) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) அறிவித்துள்ளது.
தெற்கு லெபனான் நகரமான நபாதியில் இன்றையதினம் (30) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா ரத்வான் படைகளின் திறனைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா தரப்பு
இதேவேளை, இஸ்ரேலின் இந்த அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா தரப்பிலிருந்து எந்தவொரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
🔴 ELIMINATED: Deputy Commander of Hezbollah’s Radwan Forces, Mustafa Ahmad Shahdi.
— Israel Defense Forces (@IDF) October 30, 2024
Shahdi advanced numerous terrorist attacks against Israel and oversaw attacks against IDF soldiers in southern Lebanon. He was also previously responsible for the Radwan Forces' operations during… pic.twitter.com/dAErJzAeQX
அத்தோடு, இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் குறைந்தது எட்டு நகரங்களுக்கு கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை விடுத்துள்ளது.
“உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் உடனடியாக உங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அவலி ஆற்றின் வடக்கே செல்ல வேண்டும்.உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நீங்கள் தாமதமின்றி வெளியேற வேண்டும், ”என்று எக்ஸ் வலைத்தளத்தில் இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
புதிய தலைவருக்கும் எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், ஹிஸ்புல்லாக்களின் புதிய தலைமையாக நைம் காசிமை ஹிஸ்புல்லா நேற்றையதினம் அறிவித்தது.
Temporary appointment.
— יואב גלנט - Yoav Gallant (@yoavgallant) October 29, 2024
Not for long. pic.twitter.com/ONu0GveApi
அதனை தொடர்ந்து, புதிய ஹிஸ்புல்லா தலைவரின் புகைப்படத்தை பகிர்ந்து அவரின் நியமனம் தற்காலிகமானது என்றும் நீண்ட காலத்திற்கு அல்ல என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |