போர் காலத்தில் இறக்குமதியாகியுள்ள குண்டு துளைக்காத சொகுசு கார் ஒன்று மீட்பு
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத சொகுசு கார் ஒன்று நுகேகொடை பாகொட வீதியில் உள்ள வாகன பழுது பார்க்கும் இடமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு காரானது, இன்று(22) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கண்டுடிபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சொகுசு குண்டு துளைக்காத கார் 2008 ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் எந்த சேவைக்காகவும் காரை இறக்குமதி செய்த DIMO நிறுவனத்திற்கு இது கொண்டு வரப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவல்
நுகேகொடை, பாகொட வீதியின் முதல் குறுக்குவழியில் அமைந்துள்ள ஒரு வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் தங்கியிருப்பதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அதிகாரிகள் குழு ஒன்று சம்பந்தப்பட் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் உரிமத் தகடு இல்லாத ஒரு கார் பூட்டப்பட்டிருப்பதைக் அவதானித்துள்ளனர்.
பின்னர் வாகனத்தின் கதவுகளைத் திறக்க முயன்றபோது, வாகனத்தின் அதிக எடை காரணமாக சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனை மேலும் ஆய்வு செய்தபோது, அது குண்டு துளைக்காத வாகனம் என்பது தெரியவந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
