கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று பலத்த இடி, மின்னல்!
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (13.01.2026) இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த எச்சரிக்கை இன்று (13.01.2026) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக விழக்கூடிய மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவசரநிலை ஏற்படின், உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் உதவியை நாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |