கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள் விநியோகம்
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தினை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar )ஆகியோர் இணைந்து நேற்று (27) ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது, பொது நலன் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரச நிறுவனங்கள் மூலம் ஈட்டப்படும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்