இலங்கை சுங்க திணைக்களத்திற்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்
Australia
Jaffna International Airport
Sri Lanka Customs
By Theepan
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம் (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருகொடவிடம் ஸ்கேனர்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
பலாலி விமான நிலையம்
இந்த நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்