கொரோனா மரணம் தொடர்பில் வெளியான விபரம்!
Srilanka
Corona
Death
Asela Gunawardena
By MKkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன (Asela Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,231 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 133 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,506 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி