ஜே.வி.பியை வைத்து ரணில் செய்த சூழ்ச்சி! திரைமறைவு அரிசயலை அம்பலப்படுத்திய ஹிருணிகா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மலிக் சமரவிக்கிரமவை (Malik Samarawickrama) வைத்து நடத்திய சூழ்ச்சி அவருக்கே விணையாக மாறும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இருந்து போது புதிய உறுப்பினராக நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு சென்று குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்த போது எனக்கு தெரிந்த சிரேஷ்ட அமைச்சர்கள் அந்த இடத்தில் உட்கார வேண்டாம், அதில் ஜே.பி.வி உறுப்பினர்கள் மூவருக்கானது என்றார்.
ஒரே மேசை
நானும் வேறு மேசையில் அமர்ந்து அதை அவதானித்தேன்,அப்போது அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் சுனில் அந்துன்னெத்தி (Sunil Handunneththi) ஆகியோர் வந்து அமர்ந்தனர்.
அதன் பின்னர் அவர்களுடன் மலிக் சமரவிக்கிரமவும் வந்து அமர்ந்து நீண்ட கால நண்பர்கள் போல் கதைத்து பேசினர்.
நாடாளுமன்றில் நீண்ட காலம் இருப்பவர்கள் ஒரே மேசையில் அமர்வது வழமையாகும்.
இன்று கூட மலிக் சமரவிக்கிரம அரசாங்கத்தில் தொடர்புபட்டுள்ளார் என்றவாறான கதைகள் வெளிக்கிளம்பி உள்ளன.
ஏறிவந்த ஏணி
நெருப்பிலாமல் புகையாது என்பார்கள், கடந்த சம்பவங்களை உற்று நோக்கினால் உண்மை புரிந்து விடும்.
மலிக்கின் ஜே.வி.பியுடனான நீண்ட நட்பு, தம்மை பாதுகாக்கும் என தப்பு கணக்கு போட்டுவிட்டார்.
மலிக் தேசிய மக்கள் சக்திக்கு உதவி செய்திருக்கலாம் இப்போது அவர்களுக்கு அவர் தேவையில்லைதானே.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தானே சம்பிரதாயமாகும்.
தவறான தீர்மானங்கள்
ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்தை தோற்கடிப்பதிலேயே ரணில் செயற்பட்டார், அநுர தனது நண்பர் என்று குறிப்பிட்ட அவர் அநுர வெற்றிபெறுவார் என்று கூறினார்.
ரணில் விக்ரமசிங்க டீல் அரசியல் சதுரங்க விளையாட்டில் முன்னிலை வகிப்பவர், அவரின் சூழ்ச்சி அரசியலில் தப்பு நடந்த இடமாக நான் இதை கருதுகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தெறிந்து விட்டு அரசியலில் பாதுகாப்பாக இருந்தார், நாடு வங்குரோத்தான போதும் அவரின் அரசியல் நிலைத்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஏற்பட்ட பாதகம் அறிதாகவே இருந்தது, அவர் எடுத்த அனைத்து தவறான தீர்மானங்களிலும் விலகி சென்ற அவருக்கு இது பாதகமாக அமைந்தது என நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

