ரணிலின் கைது.! கொழும்பில் பிரளயம் ஒன்றுக்காக எதிர்க்கட்சிகள் திட்டம்
ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் நாளை கொழும்பில் கூட வேண்டும் என இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பங்கேற்புடன் இன்று (25) நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலுக்கு பிறகு அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாளை (26) கொழும்பில் கட்சி சார்பின்றி கூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை
மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்காததன் மூலம் அடிப்படை பிணை நிபந்தனைகளைக் கூட காவல்துறையினர் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டதன் மூலம் அடக்குமுறை செயல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

