சர்ச்சையை கிளப்பிய யூடியூபரின் காவல்துறை பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சர்ச்சையை கிளப்பியிருந்த யூடியூபர் சுதத்த திலகசிறிக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி காவல்துறையில் முறைப்பாடு அளித்ததை அடுத்து திலகசிறிக்கு முன்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று புலனாய்வு அறிக்கைகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறை விரிவான விசாரணை
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவர் உறுதியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட காணொளிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவரின் குறித்த காணொளிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த முறைப்பாட்டுக்கமைய காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

