சிறைச்சாலையில் ஹிருணிக்காவின் பரிதாப நிலை: வெளியான தகவல்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra), ஏனைய கைதிகளுடன் வழமை போன்று செயற்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் இதுவரை பணி செய்யும் பிரிவிற்கு அனுப்புவதற்கு அவர் பரிந்துரைக்கப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு, கொழும்பு (colombo) மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் பல அரசியல் பிரதிநிதிகள் வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்குச் சென்றதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |