வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா நாளை
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், நாளை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கிரிகைகளை நடாத்தவுள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருவிழாவிற்காக சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை காவல்துறையினரும், மேற்கொண்டுள்ளதுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளது.

விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை, தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
நாளை இடம்பெறவுள்ள தேர்த் திருவிழாவிலும், நாளை மறுதினம் பிற்பகல் சமுத்திர தீத்த திருவிழாவிற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |