சாதனை படைத்த இந்திய வீரர் - ஒரு போட்டியில் 8 ஆட்டமிழப்புகள்
ரஞ்சி கோப்பை துடுப்பாட்ட போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருக்கிறது.
இதில் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின.
இதில் நாணய சுழட்சியை வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துருவ் ஷோரே மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் களம் புகுந்தார்.
ஹாட்ரிக்
ஆட்டத்தின் முதல் பந்து பரிமாற்றத்தை சவுராஷ்டிரா அணியின் தலைவர் உனத்கட் வீசினார். டெல்லி அணியினர் முதல் 2 பந்துகளில் ஓட்டம் எதுவும் பெறவில்லை.
இதையடுத்து வீசிய 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரேவை உனத்கட் ஆட்டமிழக்க செய்தார் . இதையடுத்து ராவல் களம் புகுந்தார்.
தனது துடுப்பாட அனுபவத்தை வெளிப்படுத்திய உனத்கட் ராவல் சந்தித்த முதல் பந்திலேயே அவரை வீழ்த்தினார்.
8 ஆட்டமிழப்புகளை
இதனால் அவருக்கு ஹாட்ரிக் ஆட்டமிழப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த டெல்லி அணியின் தலைவர் யாஷ் துல்லை உனத்கட் எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார்.
இதன் மூலம் உனத்கட் ஆட்டத்தின் முதல் பந்து பரிமாற்றத்திலேயே ஹாட்ரிக் ஆட்டமிழப்பை செய்து சாதனை படைத்தார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு தனது பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை மளமளவென வீழ்த்தினார்.
ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 8 ஆட்டமிழப்புகளை செய்து சாதனை படைத்தார். தனது 19 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான உனத்கட் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தனது 2வது டெஸ்ட் போட்டியை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
