மர இலையைக் கொண்ட கனேடிய கொடி..! வரலாறும் பின்னணியும்
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களுக்கென்று தனிக் கொடியை வடிவமைத்துள்ளது.
சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியில் விலங்கு, மலர், தாவரங்கள் மற்றும் பல்வேறு வடிவமைப்புகளில் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளது. அவ்வாறே கனடாவின் தேசிய கொடியிலும் மேப்பிள் மர இலையின் வடிவம் காணப்படுகிறது.
கனடா தேசியக் கொடியின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பே, அது கனடாவின் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த மேப்பிள் இலை பிற்காலத்தில் கனடியர்களின் அடையாளமாக இருந்தது.
கனடிய கொடியின் வெள்ளை நிறம் குளிர்கால பனியையும், மேப்பிள் இலைகளின் கருஞ்சிவப்பு நிறம் இலையுதிர்காலத்தையும் குறிக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா தேசியக் கொடியின் வரலாறு...
1958 -ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் கொடியின் அடிப்படையில் இல்லாத கொடியை கனடியர்கள் விரும்பினார். கனடா தேசியக் கொடிக்காக கிட்டத்தட்ட 4000 வடிவமைப்புகள் கனடியர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒக்டோபர் 22, 1964 -ல் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் ஸ்டான்லி வடிமைத்த மேப்பிள் மர இலைக் கொடி ஒரு மனதாக வாக்களிக்கப்பது.
சில தீர்மானங்களுக்குப் பிறகு முன்பு இருந்த சிவப்புக் கொடிக்குப் பதிலாக மேப்பிள் இலைக் கொடியை ஜனவரி 1965 அன்று இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிரகடனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
மேப்பிள் இலைகளின் முக்கியத்துவம்
மேப்பிள் இலை கனடா தேசியக் கொடியின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பே, அது கனடாவின் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்தது.
புத்தகங்கள், நாணயங்கள், சின்னங்கள் மற்றும் பாடல்கள் போன்ற முக்கிய கலாச்சாரத்திலும், எல்லா இடங்களிலும் காணப்பட்டது.
கனடியர்கள் சிலர் ஏற்கனவே மேப்பிள் மர இலையை அடையாளச் சினமாகக் கொண்டிருந்தாலும், முதலாம் உலகப் போரின் போது, கனடிய பயணப் படையின் உறுப்பினர்கள் மேப்பிள் மர இலையைத் தங்கள் தொப்பிகளில் சின்னங்களாக அணிந்திருந்தனர்.
இன்று கனடாவின் தேசியக் கொடியில் காட்டப்படும் ஒற்றை மேப்பிள் இலை இரண்டு உலகப் போரில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் கல்லறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
எனவே, பெருமை, விசுவாசம் மற்றும் தைரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் மேப்பிள் மர இலை நாட்டின் தேசியக் கொடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த மேப்பிள் மர இலை, கனடியர்களின் பெருமை, தைரியம் மற்றும் விசுவாசத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
இது கனடாவில் வாழும் மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக விளங்குகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
