ஈழத்தமிழரின் உலகம் வியந்த போரியல் சாதனை ஆனையிறவு !
ஆணையிறவை விடுதலைப்புலிகள் கைப்பற்றிய உலகின் மிக பிரபல்யமான புலிகளின் போர்வெற்றி நிகழ்ந்து இன்று கால்நூற்றாண்டுகள் கடக்குறது.
இந்த வெற்றிச்சரத்திரத்தை ஈழத்தமிழர்களாகிய நாம் 25 ஆண்டுகள் கடந்தும் கொண்டாடுகின்ற போது அது எவ்வளவு முக்கியமானது என்பதை தமிழர்கள் மறவாதிருக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை பொறுத்தவரை ஒரு மிகப்பெரும் கனவாக இருந்தது ஆனையிறவு.
அந்த பெருங்கனவை தனது ஒப்பற்ற போர்த்தளபதி பால்ராஜ் மூலம் தலைவர் பிரபாகரன் சாத்தியமாக்கி காட்டிய நாள் இன்றைய நாளாகும்.
ஒரு இனத்தின் விடுதலைக்கான கனவைச்சுமந்து அந்த கனவுக்காக தங்களையே இழந்து தமது மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று வரலாற்றில் வாழ்ந்த ஒரே தலைவனையும் அவரது தானைத்தளபதிகளையும் வீரப்புதல்வர்களான போராளிகளையும் இன்றைய உலகமே வியந்த பெருவெற்றியொன்றின் வரலாற்ச்சிறப்பு வாய்ந்த நாளில் நன்றியோடு நினைவுகூருகின்றது ஈழத்தமிழர்களின் வரலாற்று வலியை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் ஐபிசி தமிழ்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
