தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு!

Vijay Tamil nadu Chennai Tamil Nadu Election 2026
By Thulsi Apr 23, 2026 11:20 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழகத்தில் மாலை 5 மணி வரை 82.24% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையகத்தை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியள்ளது.

தமிழ்நாட்டில், நாமக்கல்லில் அதிகபட்சமாக 76.43% வாக்குப்பதிவு பதிவானது. அதனைத் தொடர்ந்து கரூர் 76.08%, சேலம் 75.79%, ஈரோடு 75.61%, மற்றும் திருப்பூர் 75.38% வாக்குப்பதிவுகளைப் பதிவு செய்தன. தர்மபுரி (74.68%), திண்டுக்கல் (74.35%), காஞ்சிபுரம் (72.51%), கோயம்புத்தூர் (71.16%), கள்ளக்குறிச்சி (71.11%), மற்றும் திருச்சிராப்பள்ளி (71.05%) போன்ற பிற மாவட்டங்களிலும் சீரான வாக்காளர் பங்கேற்பு காணப்பட்டது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களுக்குப் பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்காம் இணைப்பு

2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மூன்றாம் இணைப்பு

தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் இணைப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதற்கமைய இதுவரை 1 கோடியே 1 இலட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருவள்ளூர்- 17.8 சதவீதம், திருவண்ணாமலை- 17.73 சதவீதம், ஈரோடு- 19.38 சதவீதம், மதுரை 17.08 சதவீதம், நாகை- 17.51 சதவீதம், திருநெல்வேலி-15.96 சதவீதம், கன்னியாகுமரி 17.08 சதவீதம், பெரம்பலூர்- 17.68 சதவீதம் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் இதே 9.00 மணி நிலவரத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்

நேரத்தை நீடியுங்கள்...! விஜய்யிடமிருந்து பறந்த அவசர கடிதம்

முதலாம் இணைப்பு 

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. 

மக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

காவல்துறை பாதுகாப்பு

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு! | Holiday For Tamil Nadu Election 2026 Live Updates

தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் நிகழும் இருமுனைத் தேர்தல் கட்டமைப்புக்காக நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இம்முறை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜய் 

நடிகர் விஜய் தீவிர அரசியலில் நுழைந்திருப்பது, 2026 தேர்தலுக்கு ஒரு புதிய மற்றும் கணிக்க இயலாத பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. 

குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, பாரம்பரிய கட்சிகளின் சித்தாந்தங்களுடன் வலுவாக இணைந்திருக்காத ஒரு புதிய வாக்காளர் தளத்தை உருவாக்குகிறது.  

எனினும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறைந்தபட்சம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் ஊடகம் உன்றுக்கு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்  

மே 4 ஆம் திகதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது  

யாழ்ப்பாணத்தில் பதாகைகள்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் (Banners) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 82% வாக்குப்பதிவு! | Holiday For Tamil Nadu Election 2026 Live Updates

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களான யாழ். பொது நூலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தேர்தல் பரப்புரை பதாகைகளும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்

வாக்களித்த விஜய்..! பரபரப்பாகும் தேர்தல் களம்: வாக்குச்சாவடியில் குவிந்த கூட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016