பாப்பரசரை சந்தித்தார் பிரபல நடிகர்(காணொளி)
Pope Francis
Italy
Vatican
By Sumithiran
மிகவும் பிரபலமான ஹொலிவுட் அதிரடி நடிகர் சில்வெஸ்டர் ஸ்லாடோன் தனது குடும்பத்தினருடன் பாப்பரசர் இடையேயான சந்திப்பு வத்திக்கானில் நடைபெற்றது.
77 வயதான ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் தனது மனைவி ஜெனிபர், மகள்கள் சோஃபி, சிஸ்டைன், ஸ்கார்லெட் மற்றும் சகோதரர் பிராங்க் ஆகியோருடன் பாப்பரசரை சந்தித்தார்.
குடும்பத்துடன் சந்திப்பு
'உங்கள் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்' என்று பாப்ரசர் ஸ்டாலோனிடம் கூறியபோது, ஸ்டாலோன் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்டாலோன் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகர். அவரது தந்தை 1930 களில் குடியேறுவதற்காக அமெரிக்கா சென்றார்.
ஸ்டாலோனின் தந்தையின் சொந்த ஊர் ஜியோயா டெல் கோல், இத்தாலி. பாப்ரசரை சந்தித்துவிட்டு ஊருக்குச் சென்ற ஸ்டாலோன் மற்றும் சகோதரர் ஃபிராங்க் ஆகியோருக்கு உயர்ந்த வரவேற்பு கிடைத்தது.