யாழில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
sri lanka
jaffna
people
By Shalini
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே படுகாயமடைந்தார்.
சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி