விமானம் மோதி உயிரிழந்த பணியாளர்! ஹொங்கொங் விமான நிலையத்தில் சம்பவம்
ஹொங்கொங் விமான நிலையத்தில் பணியாளர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்திலிந்து தவறி விழுந்தவர் மீது விமானம் ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான ஜோர்தானைச் சேர்ந்த பணியாளர் அந்த இழுவை வாகனத்தில் அமர்ந்து வந்தபோது தடுமாறி வெளியே விழுந்துள்ளார்.
அவசர காலப் பணியாளர்கள்
இதன்போது அந்த வாகனம் இழுத்து வந்த விமானம் கீழே விழுந்தவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்ததாக ஹொங்கொங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவசர காலப் பணியாளர்களால் அவரது உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விசாரணை நடத்தப்படுகிறது
மேலும் அந்த இழுவை வாகனத்தை செலுத்திய 60 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த நபர் சீன விமான சேவையின் பணியாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |