கணிதமேதை எலியேசர் நினைவுதினம்
கணிதமேதை எலியேசர் தேசியத் தலைவரின் வழிகாட்டல் மீதும் போராட்டத்தின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டு அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர்.
1918ஆம் ஆண்டில் தாயகத்தில் பிறந்த பேராசிரியர் கணிதவியலில் கலாநிதி பட்டமும் பெற்று கணித மேதையாக திகழ்ந்த நாட்களில் இவருக்குக் கிடைத்த சர்வதேச விருதுகள் பல.
இவரது பெயரிலேயே 1948 வெளியிடப்பட்ட 'எலியேசர் தேற்றம்' கணிதவியலில் இன்றும் பிரயோகிக்கப்படும் தேற்றமாகும்.
மாமனிதர் விருது
அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து அரும்பாடுபட்டவர்.

தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தை அவுஸ்திரேலிய அரசு மட்டத்தில் எடுத்துச்சென்று பேசியவர்.
இவருக்கு 1997ஆம் ஆண்டு தேசியத்தலைவரால் 'மாமனிதர்' விருது வழங்கப்பட்டது.
முதல் முறையாக இவ் விருது தமிழீழ தாயகத்திற்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய நாளில் எமது தேசிய உரிமையை சர்வதேச அரங்கில் எடுத்துச்சென்ற ஈழத்தமிழர்களின் பெருமையாய் விளங்கும் பேராசிரியரை ஐபிசி தமிழ் நினைவேந்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |