அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் இரண்டு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்:ஈரான்
அமெரிக்கா தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களில் மீண்டும் திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இன்று (2) தெரிவித்துள்ளது.
முன்னதாக, இத்திட்டம் ஒரு வார காலக்கெடுவாக முன்மொழியப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"இந்தத் திட்டத்தை இரண்டு நாட்களில் செயல்படுத்தும் சாத்தியம், ஈரானின் நல்லெண்ண அணுகுமுறைக்கு மற்றொரு சான்றாகும்.
ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை மீட்டெடுத்து, குறுகிய காலத்திற்குள் பேச்சுவார்த்தை செயல்முறையை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் கூறியுள்ளோம்."
மேலும், "மத்தியஸ்தர்கள் வழியாக செய்திப் பரிமாற்றம் இன்னும் தொடர்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |