ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்
கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவானின் பெயர்ச்சி, ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நீதி, செயல்பாடு, பலன்கள் இருக்கும். அதில் சனி பகவான் நம் வினைகளுக்கு ஏற்ற நன்மை மற்றும் தண்டனை தரக்கூடிய கிரகமாக செயல்படுவதால், அவரின் கோள்சார அமைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
சனி பகவானின் பெயர்ச்சி
நம்முடைய ஜாதகத்தில் சனி பகவான் அமைந்துள்ள இடத்தை பொறுத்தும், கோள் சாரத்தின் நிலையில் நம்முடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ள முடியும்.
அதனடிப்பயைில், சனிபகவான் தற்போது அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து வரும் நிலையில் 2025 மார்ச் 29 வரை கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த அமைப்பால் எந்த ராசியினருக்கு கடுமையான பலன்கள் ஏற்படும் என பார்க்கலாம்.
12 ராசிகளுக்கும் சனி பகவான் தரும் பலன்களை பார்க்கலாம்.
மேஷ ராசி - லாப சனி ரிஷப ராசி - கர்ம சனி மிதுன ராசி - பாக்கிய சனி கடக ராசி - அஷ்டம சனி சிம்ம ராசி - கண்ட சனி கன்னி ராசி - ரோக சனி துலாம் ராசி - பஞ்சம சனி விருச்சிக ராசி - அஷ்டம சனி தனுசு ராசி - சகாய சனி ( ஏழரை சனி முடிவு) மகர ராசி - பாத சனி ஆரம்பம் கும்ப ராசி - ஜென்மா சனி ஆரம்பம் மீன ராசி - விரய சனி ( ஏழரை சனியின் முதல் நிலை ஆரம்பம்.)
மகரம்
மகர ராசிகாரர்களுக்கு தற்போது ஏழரை சனி இறுதி கட்டத்தில் உள்ளது.எனவே, இந்த காலமானது திருமண வாழ்க்கையை பாதிக்கும் எனலாம்.
ஆகவே, விட்டுக் கொடுத்துச் செல்வதும், பேச்சை குறைத்துக்கொள்வதும் இவர்களுக்கு சிறந்தது. மேலும், மகர ராசிகாரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கும்பம்
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ஜென்ம சனியாக இருந்து வருவதோடு ஜூன் 30-ம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.
இதனால் கும்ப ராசியினருக்கு சற்று கெடு பலன் தான் ஏற்படும் என்பதுடன் புதிய தொழில் தடங்கலும் சொந்த வியாபாரத்தில் இழுப்பறியும் ஏற்படலாம். சூழலை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் நிலையான, விரய சனி நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. எனவே,தொழில், வியாபாரம், வேலை, திருமண வாழ்க்கை, வருமானம், ஆரோக்கியம் போன்றவற்றில் சிக்கல் ஏற்படும்.
எனவே கவனமாக செயற்படுவது நல்லதாகும். அதிகமான அழுத்தம், மன அமைதி இன்மை ஏற்படும். முக்கியமாக உடல் நிலையில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |