ஏ9 வீதியில் கோர விபத்து - சிறுமிக்கு எமனான நாய்
ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாக முற்பட்டுள்ளது.
நாயால் ஏற்பட்ட விபத்து

இந்த நிலையில் சாரதி விபத்தை தவிர்ப்பதற்காக வாகனத்தை செலுத்திய போது வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது கட்டுப்பாட்டையிழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவரது தாயார் மற்றும் கார் சாரதி இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில்

மரணமடைந்த சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து பூனாவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.