A9 பிரதான வீதியில் கோர விபத்து - யாழ் திரும்பிய இரு இளைஞர்கள் பலி
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கோர விபத்தில் 25 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த 25 வயதுடைய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |