மக்களை அவமானப்படுத்தவா சுதந்திரதினம் ..! கர்தினால் மல்கம் ரஞ்சித் காட்டமாக கேள்வி
நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தலைவர்கள் யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்களின் சுதந்திரமா மக்களின் சுதந்திரமா வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகளை வரவழைத்து பட்டினியால் வாடும் மக்களை நாட்டின் உயரதிகாரிகளுக்கு முன்னால் அவமானப்படுத்துவது சுதந்திரமா, நாட்டை ஒடுக்கும் தலைமையிலிருந்து விடுவித்து புதிய தலைவரை நியமிக்கும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொரளை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்து கொண்ட போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகள் இன்றும் அரசியலில்
ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகள் இன்றும் அரசியலில் உள்ளனர். இன்றும் காவல்துறையில் உள்ளனர்.
இன்று நாட்டில் சட்டம் இல்லை சட்டத்திற்கு இடமில்லை அக்கிரமம் இருக்கிறது.இதனை நினைத்து ஒரு நாடாக நாம் வெட்கப்பட வேண்டும்!
“நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. யாருடைய சுதந்திரம் கொண்டாடப்படுகிறது என்று தலைவர்களிடம் கேளுங்கள் ஆட்சியாளர்களின் சுதந்திரமா மக்களின் சுதந்திரமா
பட்டினியால் வாடும் மக்களை அவமானப்படுத்துவதற்கு
வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகளை வரவழைத்து பட்டினியால் வாடும் மக்களை நாட்டின் உயரதிகாரிகளுக்கு முன்னால் அவமானப்படுத்துவது சுதந்திரமா
எங்கள் அழகான தாய்நாடு துரதிர்ஷ்டவசமானது. அடக்குமுறை தலைமைத்துவத்தில் இருந்து நாட்டை விடுவித்து புதிய தலைவரை நியமிக்கும் காலம் வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |