வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் : இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை!
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக சந்தேக நபர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற இடபற்றாக்குறை காரணமாக கைதிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இடபற்றாக்குறைக்கான தீர்வு
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தடுப்பு காவலில் வைப்பதற்கு பதிலாக சந்தேக நபர்களை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |