லண்டனில் குடியிருப்புகளின் விலையில் வீழ்ச்சி
லண்டன் குடியிருப்புகளின் விலைகள் மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 2009க்குப் பிறகு லண்டன் குடியிருப்புகளின் விலை மிக வேகமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் குறிப்பிடுகின்றன.
அத்தோடு, ஒக்டோபர் 2023 வரையிலான 12 மாதங்களில் ஆண்டு பணவீக்க விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே லண்டனில் குடியிருப்புகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
சராசரி குடியிருப்பு விலை
இந்நிலையில், அங்கு நவம்பர் 2022 முதல் 2023 வரையிலான ஆண்டில் குடியிருப்புகள் விலை சுமார் ஆறு சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
எனினும், பிரித்தானியாவில் உள்ள எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு லண்டனின் சராசரி குடியிருப்பு விலைகள் அதிகரிப்பாகவே காணப்படுகிறது.
விலை வீழ்ச்சி
அதேவேளை, ஒரே ஆண்டில் 6 சதவிகிதம் விலை வீழ்ச்சி அடைந்தும், லண்டனில் குடியிருப்புகளின் சராசரி விலை 505,000 பவுண்டுகளாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் குடியிருப்புகளின் விலை 2.9 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது, வேல்ஸ் பகுதியில் குடியிருப்புகளின் விலை 2.4 சதவிகித வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |