கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விலைகளில் மாற்றம்
கனடாவில் (Canada) அண்மைக்காலமாக வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கனடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2025 ஓகஸ்ட் மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய வீட்டு மனை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் வாங்குபவர்களின் ஆர்வம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு விற்பனை
அந்தவகையில், கடந்த மாதம் நாடு முழுவதும் 40,257 வீடுகள் விற்பனையாகியுள்ளன, இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வந்த 39,522 வீடுகளைவிட 1.9% அதிகம் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன் மாதந்தோறும் வீட்டு விற்பனை 1.1% உயர்ந்து வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து மொத்தமாக 12.5% உயர்வு பதிவாகி, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீட்டு விற்பனை அதிகரிப்பை காணப்பட்டுள்ளது.
சாதாரணமாக அக்டோபர் காலத்தில் புதிய வீடுகள் சந்தைக்கு வந்தாலும், இந்த வாரம் கனடா வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் வாங்குபவர்களின் ஆர்வம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உயரும் வாய்ப்பு
மேலும், புதிய வீட்டு பட்டியல்கள் மாதந்தோறும் 2.6% உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் இறுதியில் நாடு முழுவதும் விற்பனைக்கு இருந்த வீடுகள் 1,95,453 ஆக பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட 8.8% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 2025 ஓகஸ்ட் மாதத்தில் விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை 664,078 டொலர், இது கடந்த ஆண்டை விட 1.8% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
