திடீரென வெடித்துச் சிதறிய வீடு! தீவிர விசாரணையில் காவல்துறையினர்
Police
Kurunegala
SriLanka
Alawwa
Pangolla
By Chanakyan
குருநாகல் - அலவ்வ, பன்கொல்ல பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போயவலான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பன்கொல்ல பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வீடொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து அலவ்வ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பில் குறித்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், குறித்த வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் கல்குவாரியொன்றை நடத்தி வந்தவர் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை போயவலான காவல்துறையினர் முன்னெடுத்தவருகின்றனர்.