வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்: மலையக மக்களுக்கான சம்பளம் பெப்ரவரியில் உறுதி!
எந்தவொரு சமூகத்தாலும் மற்றுமொரு சமூகம் நசுக்கப்படக் கூடாது எனவும் அதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது எனவும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
அரசியல் நேர்காணலொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
பேரிடர் நிலைமையின் போது வடக்கு, கிழக்குக்கு மலையக மக்களை வரவேற்றவர்களுக்கு அமைச்சர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.
வீட்டு வசதி
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக அரசாங்கம் வீடுகளை கட்டிக் கொடுக்கும். மலையக மக்களுக்கு காணியுரிமை வழங்க தடையாக உள்ள கம்பெனிகள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் காணிகள் வழங்கப்படும் போது வீடுகள் கட்டிக்கொடுக்கும் போது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிபாரிசின் கீழே வழங்கப்படும்.“
மலையக மக்களுக்கு உறுதியளித்த 1750 ரூபா சம்பளம் பெப்ரவரியில் நிச்சயம் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |