யாழில் நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீடுகள்
நன்னடத்தை பராமரிப்பில் இருந்து வெளியேறிய பயனாளிக்கு வீடொன்றினை கையளித்துள்ளதுடன் , மேலும் 48 வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில். யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு பொதி வழங்குவதற்கு 210 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்குவதற்கு 114 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
சிறார்களுக்கான வீடமைப்பு திட்டம்
அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுக்காக 5 மில்லியன் ரூபா, அதேபோல பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு, சர்வதேச சிறுவர் தினம், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத் திட்டங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களுக்குப் மகளிர் விவகார அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.

அதேபோல நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு 11 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.
அத்துடன், நன்னடத்தை பராமரிப்பில் இருந்து 18 வயது பூர்த்தியானதுக்குப் பிறகு சமூக மயமாகும் சிறார்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு யாழ் மாவட்டத்துக்கு 49 வீடுகள் அமைப்பதற்காகத் தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் 98 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நன்னடத்தை நிலையங்களில் இருந்து வெளியேறிய சிறார்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பயனாளிக்கு கையளித்தோம். மேலும் 48 வீடுகள் முழுமைப்படுத்தி அந்தப் பயனாளிகளுக்கான வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில