16 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்தியது எப்படி? ஆரம்பமானது மற்றுமொரு விசாரணை
child
house maid
richard bathiudeen
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி தொடர்பாக தொழில் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
16 வயதிற்குக் குறைவாக உள்ள சிறுமி எவ்வாறு பணிப்பெண்ணாக வீட்டில் இணைக்கப்பட்டார் என்பது தொடர்பாக வாக்குமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மற்றும் வீட்டில் உள்ள ஏனையவர்களிடம் பெறப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரம் தொடர்பான ஆணையாளர் தீப்தி சுமனசேன தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக வருடாந்தம் எண்ணாயிரத்து 500 வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.