காவல்துறையை இப்படியும் ஏமாற்றலாம் - வசமாக சிக்கிய இருவர்
மாமனாருக்கு காவல்துறை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட காவல்துறை என எழுதப்பட்ட கோட் அணிந்து காவல்துறை அதிகாரிகளை தவறாக வழிநடத்த முற்பட்ட மருமகன் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்ததாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஊவா மாகாணத்தை சேர்ந்த வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் எனவும், அதில் வருமான அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ், ஆவணங்கள் எதுவும் இல்லாததுடன், சாரதிக்கு குறைந்தபட்சம் சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லை எனவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரவு ரோந்தில் மேற்கொண்ட விரைவுப்பரிசோதனை
பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் இங்கிரிய காவல்துறை போக்குவரத்து உத்தியோகத்தர் அமரசிங்க, பிரதேச காவல்துறை சார்ஜன்ட் உள்ளிட்ட குழுவினர் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த போது மேற்கொண்ட விரைவுப் பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை என்ற வாசகத்துடன் கூடிய மழை அங்கி
ஹொரணையில் இருந்து இங்கிரிய நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரிடம் எங்கே போகிறீர்கள் என வினவிய போதே,எரிபொருள் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.அதிகாலை ஒரு மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை என்பதை காவல்துறை உத்தியோகத்தர்கள் உணர்ந்தனர். சந்தேகத்திற்கிடமான வாகன ஓட்டி காவல்துறை என்ற வாசகத்துடன் கூடிய மழை அங்கியை அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் போது, உண்மைகள் தெரியவந்துள்ளன.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவர், காவல்துறை என குறிப்பிடப்பட்ட கோட் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
