கொரோனாவுடன் வாழ்வது எப்படி? அமெரிக்க வைத்தியர் தரும் ஆலோசனை
கொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் பஹீம் யூனுஸ் ( Baheem Yunus).
செய்தியாளர்களுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கொரோனாவுடன் வாழ நாம் கற்று கொள்ள வேண்டும். இதற்கு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாவலை கைவிட வேண்டும் என அர்த்தம் இல்லை.
நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆபத்தான சூழலை தவிர்க்க செயலூக்கி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்.
இசைக் கச்சேரிக்கோ அல்லது மதுபான விடுதிக்கோ செல்வது இன்றியமையாத ஒன்றல்ல. ஆனால், எம்முடைய பெற்றோரை கவனிப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
நல்ல தரமுள்ள முக கவசங்களை அணிவது மற்றும் முழு அளவிலான தடுப்பூசியை செலுத்திக்கொள்வது ஆகியவற்றால் கொரோனாவுடன் நாம் வாழ முடியும்.
அவை மரணம் ஏற்படாமலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறாமலும் தடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
You May Like This