காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு பானம் போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
இருப்பினும், அஅதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑பாலக் கீரை
- உங்கள் முடி நுண்குழாய்கள் மற்றும் உச்சந்தலையை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது.
- இதற்கு மூன்று புதிய கீரை இலைகளுடன் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி ஆற வைத்து காலையில் வெறு வயிற்றில் இதை குடிக்க வேண்டும்.
- இதை தினமும் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியில் விரைவாக தெரியும்.
🛑பசலைக் கீரை மற்றும் தயிர்
- இதற்கு புதிய கீரை இலைகளை எடுத்து இரண்டு ஸ்பூன் புதிய தயிரைச் சேர்க்கவும்.
- சுவைக்காக நீங்கள் சிறிது தேனையும் சேர்த்து கொள்ளலாம்.
- இந்த கலவை முடியை வலுப்படுத்தி ஒட்டுமொத்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- இதை மதிய உணவிற்கு முன்னர் வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் போதும்.
🛑பசலைக் கீரை மற்றும் முட்டை
- இதற்கு தண்ணீருடன் ஒரு புதிய கீரை எடுத்து அதை மிக்ஸியில் அரைத்து இதனுடன் ஒரு முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது இதை காலை வெறும் வயிற்றில் நீங்கள் தினமும் காலையில் குடித்து வந்தால் முடி காடு போல வளரும்.
- இந்த கலவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இது முற்றிலும் முடி வளர்ச்சியில் மாற்றம் தரும்.
- இதில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதுடன் இது உங்கள் முடி நுண்குழாய்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கவும், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகின்றது.
- கீரையை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் ஒரு ஸ்கால்ப் மசாஜாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.
- இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி