இரவில் மன அழுத்தத்தால் அவதியா : இலகுவில் வெளியில் வர நிரந்தர தீர்வு
நாம் அனைவரும் காலையில் இருந்து எவ்வளவு ஆனந்தமாக அனைவரிடமும் கதைத்து உறவாடி அந்த நாளை கடத்தினாலும் இரவானால் பலதரப்பட்ட விடயங்களை சிந்தித்து தூங்காமல் மன அழுத்தத்தினால் தவிப்பது பழக்கமாகிவிட்டது.
இதற்கு நாம் தனிப்பட்ட ரீதியில் அனுபவிக்கும் பிரச்சினைகள் மற்றும் சுற்றியுள்ள சூழலுமே காரணம்.
இரவில் மன அழுத்தம் (depression) மற்றும் அளவுக்கதிகாமான யோசனை (overthinking ) காரணமாக யுவதிகள் மற்றும் இளைஞர்கள் இளம் வயதிலேயே சந்தோசகரமான வாழ்க்கையையும், வயதானவர்கள் தனது ஆரோக்கியகரமான வாழ்க்கையையும் இழக்க நேரிடுகின்றது.
மீள்வதற்கான வாய்ப்புக்கள்
இதனால், இதிலிருந்து வெளியில் வருவதற்காக வைத்தியர் மற்றும் மருந்துகள் என அளவில்லாமல் பணத்தை செலவழிக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
ஆனால் யாருக்கும் தெரிவதில்லை அதற்கு வைத்தியர்களோ மற்றும் மருந்துகளோ தேவையில்லை நாம் நினைத்தால் பணத்தை செலவிடாமல் மீண்டு வரலாமென்று.
காரணம், நாம் வைத்தியர் மற்றும் மருந்து என்று செல்லும் இடத்தில் அதுவும் நமக்கு ஒரு போதையாக மாறக்கூடும் காரணம், மீண்டும் நாம் பாதிக்கப்படும் போது அங்கு வைத்தியரின் தேவை நமக்கு கட்டாயமாக்கப்படும்.
ஆகையால், ஒவ்வொரு தடவையும் அது நமக்கு செலவை ஏற்படுத்தக்கூடும், இந்தநிலையில் இதனை தவிர்த்து நாம் மனது வைத்தால் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகாமவுள்ளது.
கசப்பான நிகழ்வு
நமது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளின் தாக்கமே மன அழுத்தத்திற்கு பெரும் காரணமாக அமைகின்றது.
அவ்வாறான நிகழ்வுகளை நாம் தொடர்ந்து சிந்திக்கும் போது அதிலிருந்து மீள்வதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
இந்தநிலையில், நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளை சிந்திப்பதை விடுத்து அதிலிருந்து மீள்வதற்காக நம்மை சுற்றியுள்ள மகிழ்ச்சிகரமான சூழலுக்கு நாம் பழக்கப்பட வேண்டும்.
சுற்றியுள்ள நண்பர்கள், பெற்றோர் மற்றும் விளையாட்டு என எது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றதோ அதனுடன் அதிகம் நேரம் செலவிட வேண்டும்.
அதிக வலிமை
செய்யும் தொழிலில் அதிக கவனத்தையும் மற்றும் நேரத்தையும் செலவிட வேண்டும் காரணம் அது நம்மை ஏனைய விடயங்களை சிந்திக்க வைக்காது மூளையை செயல்படுத்திக்கொண்டே இருக்கும் பட்சத்தில் நம் சிந்தனை அதனை தாண்டி செல்லாது.
மிகவும் முக்கியமான விடயம் உடற்பயிற்சி செய்தல், காரணம் உடற்பயிற்சி செய்யும் போது அது இலகுவான விடயங்களுக்கு நம்மை உடையவிடாது மனதளவிலும் மற்றும் உடளவிலும் நம்மை அதிகம் வலிமையாக்கும்.
பிடித்த விடயங்களை செய்வதில் ஈடுபாடை அதிகம் செலுத்தும் போது அது நம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்வதுடன் நம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
குறிக்கோள் மற்றும் இலட்சியத்தை நோக்கி பயணப்பாதையை அமைத்தல், காரணம் அது நம்மை சாதிக்க வைப்பதுடன் நிரந்தமாக மன அழுத்தத்திலிருந்து நம்மை மீண்டு வரும் உதவும்.
இவ்வாறான, செயல்பாடுகள் மூலம் நம்பால் நிரந்தரமாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வர முடிவதுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டு செல்வதற்கான சூழலும் உருவாகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |