பட்டு போன்ற மென்மையான கூந்தல் வேண்டுமா: இதை பயன்படுத்துங்க போதும்!
அனைவருக்குமே, தங்களது கூந்தல் பட்டுபோன்று மென்மையாக மற்றும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்காக பல முயற்சிகளை முன்னெடுப்போம்.இரசாயனங்களை பயன்படுத்துவோம்.
அவை தற்காலிக தீர்வுகளை தந்தாலும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இயற்கையான முறையில் எவ்வாறு கூந்தலை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.
பட்டு போன்ற மென்மையான கூந்தல்
கூந்தலைப் பளபளப்பாக வைத்திருப்பதில் முட்டை சிறந்த பங்கு வகிக்கின்றது.
இதில் புரோட்டீன், ஃபேட்டி ஆசிட், லெசிதின் போன்றவை இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவும்.
பொலிவிழந்த கூந்தலுக்கும், உடைந்த கூந்தலுக்கும் முட்டையை தொடர்ந்து பயன்படுத்தினால் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும்.அடர்த்தியான வலுவான கூந்தலை பெற முடியும்.
முட்டையின் வெள்ளைக் கரு
முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனைக் கலக்கி நன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவையை தலைமுடி மற்றும் மண்டை ஓட்டில் தடவி, ஒரு மெல்லிய துணியால் தலையை நன்றாகக் கட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் மிதமான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலையைக் கழுவவும்.
வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர பட்டுபோன்று மென்மையாக மற்றும் பளபளப்பான கூந்தலை பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |