ஜெனிவா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்
srilanka
meeting
sumanthiran
By Vasanth
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, திருப்புமுனையாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நீதிமன்ற பொறிமுறைகளின் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கமும் சேர்ந்து முன்வர வேண்டும். எனவே அரசாங்கம், இனியாவது தாம் பயணிக்கும் பிழையான திசையிலிருந்து திரும்பி, சரியான திசையில் பயணிக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.