பாதுகாப்பு துறை உயர்மட்டங்களுக்கு அவசரமாக அழைப்பு
Shavendra Silva
Sri Lanka Police
Human Rights Commission Of Sri Lanka
Army Day
Sri Lanka Violence 2022
By Vanan
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் காவல்துறை மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆகிய இருவரையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்